News December 26, 2024

விமானத்தில் இயந்திர கோளாறு: 113 பேர் தப்பினர்

image

சென்னையில் இருந்து 107 பயணிகள் உட்பட 113 பேருடன் பெங்களூர் புறப்பட்டுச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நடுவானில் பறந்தபோது விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு 113 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

Similar News

News October 1, 2025

செங்கல்பட்டு: கனரா வங்கியில் வேலை

image

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ.15,000 வழங்கப்படும். இதற்கு<> இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அக்.12-ம் தேதி கடைசி ஆகும். (வங்கில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News October 1, 2025

செங்கல்பட்டு: 12th போதும்.. ரூ.69,000 சம்பளம்

image

SSC-ல் கான்ஸ்டபிள் பணிக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 7,565 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கு 12th பாஸ் போதும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.69,000 சம்பளம் வழங்கப்படும். 18- 25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் அக்.21க்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். (+2 முடித்த அனைவருக்கும் இதை உடனே ஷேர் பண்ணுங்க)

News October 1, 2025

ஸ்தம்பித்த தாம்பரம் ரயில் நிலையம்

image

ஆயுதபூஜை பண்டிகை அக்.,1-ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 2-ம் தேதி காந்திஜெயந்தி வருவதால் தாம்பரத்தில் இருந்து சொந்த ஊருக்கு பலரும் புறப்பட்டு சென்றனர். இந்த தொடர் விடுமுறையை அடுத்து பொதுமக்கள் பலரும் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் தாம்பரம் ரயில் நிலையம் (ம) பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

error: Content is protected !!