News February 26, 2026
விபத்து நிவாரணம் பெற புதிய இணையதளம்

முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியுதவியை பெற வசதியாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. <
Similar News
News February 27, 2026
ஓட்டுநர் உரிம முறையில் மாற்றங்கள்..!

சாலை விபத்துகளை கட்டுப்படுத்த கிரேடு அடிப்படையிலான ஓட்டுநர் உரிம முறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதிவேகம், மது போதையில் ஓட்டுதல் போன்ற காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் 1.8 லட்சம் பேர் இறக்கின்றனர். எனவே, விரைவில் புதிய முறையை கொண்டுவருவோம் என்றும் போக்குவரத்து விதிகளை மீறினால் பாயிண்ட்ஸ் குறைக்கப்பட்டு வரும் என்றும் மத்திய அமைச்சர் கட்கரி கூறியுள்ளார்.
News February 27, 2026
இனி கூகுள் மேப் வழிகாட்டும்!

ஆதார் மையங்களை கூகுள் மேப்பில் காண்பிக்க UIDAI கூகுள் நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளது. பெயர் சேர்க்கை அல்லது தகவல் புதுப்பிப்பு போன்ற சேவைகளுக்கு நாடு முழுவதும் உள்ள 60,000க்கும் மேற்பட்ட ஆதார் மையங்களை எளிதாக அடையாளம் காண இந்த முயற்சி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் மேப்பில் பயனர்கள் தேடும்போது, அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களுக்கு செல்வதை இந்த வசதி உறுதி செய்யும்.
News February 27, 2026
‘கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு நியாயமான பங்கு’

சமூக ஊடக தளங்கள் தங்கள் வருவாயில் நியாயமான பங்கை கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கோரியுள்ளார். இது தொழில்முறை பத்திரிகையாளர்கள் முதல் தொலைதூரப் பகுதிகளில் உள்ள படைப்பாளர்கள் வரை அனைவருக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். மேலும், டீப் ஃபேக் வீடியோக்கள் மற்றும் போலி செய்திகள் அதிகரித்து வருவதால் இதனை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கூறினார்.


