News April 4, 2025
விபத்தில் படுகாயமடைந்த அதிமுக பிரமுகர் பலி

உப்புவேலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (35). அதிமுக பிரமுகரான இவர், கடந்த 29ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (55) என்பவருடன், பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெருமாள் நேற்று (ஏப்.3) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 11, 2025
அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் விழுப்புரத்தில் ஆய்வு கூட்டம்

(நவ.11) வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை சார்பில் கடலூர் மணடல ஆய்வுக்கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். வணிகவரி பத்திர பதிவுத்துறை சார்பாக பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டது.
News November 11, 2025
விழுப்புரம்: இளைஞர்களே செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்<
News November 11, 2025
விழுப்புரம்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். (SHARE IT)


