News October 23, 2024

விபத்தில் சிக்கிய பெண்: மேயர், கமிஷனர் ஆய்வு

image

திருநெல்வேலி மாநகராட்சி 55வது வார்டுக்கு உட்பட்ட திருமால் நகர் அருகே சாலையில் சென்ற மாடு, இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவி மீது மோதி பலத்த காயமடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கவும், மாடுகளின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மேயர் கோ.ராமகிருஷ்ணன் மற்றும் ஆணையாளர் சுக புத்ரா ஆகியோர் இன்று காலை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Similar News

News February 28, 2026

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்நிலைகளின் நிலவரம்

image

மணிமுத்தாறு
உச்சநீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 90.76 அடி
நீர் வரத்து: 190.76 கனஅடி
வெளியேற்றம் : 440 கன அடி

பாபநாசம்
உச்சநீர்மட்டம்: 143 அடி
நீர் இருப்பு: 79.00 கன அடி
நீர் வரத்து: 139.201 அடி
வெளியேற்றம்: 800 கன அடி

சேர்வலாறு
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு: 85.24 அடி
நீர்வரத்து : இல்லை
வெளியேற்றம் : இல்லை

News February 28, 2026

திருநெல்வேலி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

திருநெல்வேலி மக்களே; வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 28, 2026

நெல்லை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் விடுத்துள்ள செய்தி குறிப்பு: களக்காடு விநாயகர் கோவில் சிலை சேதப்படுத்தப்பட்ட விவாகரத்தில், மது போதையில் குற்றவாளிகள் செயல்பட்டது தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு எந்த பின்னணியும் இல்லை. உறுதி செய்யப்படாத தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!