News February 20, 2025
விபத்தில் கல்லூரி பேராசிரியர் பலி

சேலம், பெருமாம்பட்டி அருகே உள்ள தும்பா தூளிபட்டியை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் சத்தியமூர்த்தி (36). இவர் தனது பைக்கில் பணிக்கு சென்ற போது சிவதாபுரம் ரயில்வே பாலத்தின் கீழ் எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News September 12, 2025
செப்.13 சேலத்தில் எங்கெல்லாம் முகாம் தெரியுமா?

சேலம் செப் 13 நாளை உங்களுடன் முகாம் நடைபெறும் இடங்கள்
▶️சூரமங்கலம் மண்டலம் புனித ஜோசப் தொடக்கப்பள்ளி சூரமங்கலம்
▶️ஓமலூர் சிரஞ்சீவி திருமண மண்டபம் பஞ்சுகாளிப்பட்டி ▶️வாழப்பாடி வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் வேப்பிலைப்பட்டி
▶️சங்ககிரி ரங்கசாமி திருமண மண்டபம் வடுகம்பட்டி ▶️கொங்கணாபுரம் திருக்குறள் திருமண மண்டபம் புதுபாளையம்
▶️ பனமரத்துப்பட்டி விஜய மஹால் திருமண மண்டபம் கஜல்நாயக்கன்பட்டி
News September 12, 2025
அறிவித்தார் சேலம் கலெக்டர்..!

சேலம் மாவட்டத்தில் காளான் விதை உற்பத்தி தொகுப்பு அமைக்க விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை நேரிலோ (அ) தபால் மூலமாகவோ திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், அறை எண் 207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற முகவரியில் வரும் செப்.15 மாலை 05.00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் மாவட்டத்தில் இன்று (11.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.