News February 20, 2025
விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

விருதுநகரில் கடந்த 10.11.2024 அன்று முதல்வர் ஸ்டாலின் பட்டாசு விபத்தில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும் என அறிவித்தார். இதற்கு ரூ.5.00 கோடி நிதி ஒதுக்கிய நிலையில் 10.11.2024 முதல் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 98659-58876, 93447-45064 எண்களின் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News October 29, 2025
விருதுநகரில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா 30.10.2025 அன்று நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட வழித்தடங்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள், எப்.எல்-2, மற்றும் எப்.எல்-3 ஆகிய உரிமஸ்தலங்களில் மதுபான விற்பனை ஏதும் செய்யக்கூடாது. அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார்.
News October 29, 2025
விருதுநகரில் 2150 போலீசார் பாதுகாப்பு பணி

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் 2150 போலீசார் வாகன சோதனை பாதுகாப்பு மற்றும் ஆய்வுப் பணியில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக விருதுநகர், அல்லம்பட்டி, பந்தல்குடி ராமலிங்காமில், சாத்தூர் பகுதியில் தோட்டிலோகன்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அழகாபுரி, திருச்சுழி பகுதியில் க.விலக்கு உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர்.
News October 29, 2025
“அறிவும் வளமும்” என்ற தலைப்பில் வடிவமைக்கப்பட்ட இலச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (29.10.2025) 4வது விருதுநகர் புத்தகத் திருவிழா 2025 நடைபெறுவதை முன்னிட்டு, “அறிவும் வளமும்” என்ற தலைப்பில் வடிவமைக்கப்பட்ட இலச்சினை (LOGO) மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா வெளியிட்டார். நவம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 11 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.


