News March 25, 2025

விபத்தில் இளைஞர் பரிதாப பலி

image

செங்கத்தை அடுத்த கிருஷ்ணாபுரத்தை சார்ந்தவர் சந்திரன் மகன் அஜித் குமார் (25). இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது டிராக்டர் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அஜித் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து செங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஓட்டுநர் கோபி மற்றும் டிராக்டர் உரிமையாளர் பிரகாஷ் ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர்.

Similar News

News August 5, 2025

தி.மலை: 10th பாஸ் போதும் ரயில்வே வேலை ரெடி

image

கொங்கன் ரயில்வேயில் உள்ள முக்கிய பதவியாக கீமேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீமேன் பதவிக்கு 10ஆம் வகுப்பு முடித்த 28 வயது உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,500 சம்பளம் வழங்கப்படும். தேர்வு கிடையாது. ஆர்வமுள்ளவர்கள்<> இந்த லிங்கில்<<>> உள்ள விண்ணப்பத்தை வரும் ஆக.11ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம். செம்ம வாய்ப்பு, ஷேர் பண்ணுங்க.

News August 5, 2025

தி.மலை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 627 மனுக்கள்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் (ஆகஸ்டு.04) திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி 627 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

News August 5, 2025

தி.மலை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

செங்கம் அடுத்த பெரியகோளாப்பாடி கிராம சேவை மைய கட்டிடத்தில், நாளை ஆகஸ்ட்-5, செவ்வாய்க்கிழமை, காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. அஸ்வநாகசுரணை, பீமானந்தல் (ம) சின்னகோளாப்பாடி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் தமிழ்நாடு அரசின் 15 துறைகளின் 45 விதமான சேவைகள் வழங்கிட பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட உள்ளது.

error: Content is protected !!