News November 10, 2025
விநாயகர் போல் காட்சி அளிக்கும் முருகர் கோயில் மலை

தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த மலையானது பார்ப்பதற்கு யானை உட்கார்ந்த நிலையில், துதிக்கையால் நிலத்தில் ஊன்றியிருப்பது போல் இருக்கும். முருகன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் இரு கைகளை உடைய சாத்வீக மூர்த்தியாக கையில் வேலுடன், மயில் வாகனத்தில் காட்சியளிக்கின்றார். தொழில் வளம் சிறக்க, குடும்ப பிரச்சனை தீர பக்தர்கள் முருகனை வணங்கி செல்கின்றனர்.
Similar News
News March 13, 2026
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: வணிகர் சங்கம்

மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து விளக்கங்கள் கொடுத்த நிலையிலும், பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் குறைந்தபாடில்லை. வழக்கமாக நாள் ஒன்றுக்கு 2 கோடி லிட்டர் வரை பெட்ரோல் விற்பனையாகும் நிலையில், நேற்று ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் 3.5 கோடி லிட்டர் பெட்ரோல், டீசல் விற்பனையாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்று பெட்ரோலிய வணிகர் சங்கம் மீண்டும் விளக்கமளித்துள்ளது.
News March 13, 2026
கட்சியின் பெயரை இன்று அறிவிக்கிறாரா சசிகலா?

கடந்த பிப்.24-ல் புதிய கட்சி தொடங்கியதாக அறிவித்த சசிகலா, அண்ணா, MGR, ஜெ., படங்கள் இடம்பெற்ற கொடியையும் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், தனது ஆதரவு நிர்வாகிகளை சென்னை போயஸ் கார்டன் இல்லத்துக்கு வருமாறு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து, அவர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு இன்று கட்சியின் பெயரை சசிகலா வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன பெயர் வைப்பார் என்று கமெண்ட் பண்ணுங்க.