News August 23, 2024
விநாயகர் சிலைகளை கரைக்கப்படுவதற்கு கட்டுப்பாடுகள்

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, சின்னமனூர், கம்பம், போடி, பகுதியில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். அச்சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழி முறைகள் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுசூழலை பாதுகாக்க விதி முறைகளை கடைபிடிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியர் ஷஜீவணா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 9, 2025
தேனி அருகே ஓட்டுநரை தாக்கி ஆட்டோ திருட்டு

பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவசக்திவேலன். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். தேனி புதிய பஸ் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் உப்பார்பட்டி செல்லவேண்டும் என கூறவே. ஆட்டோவில் சென்று கொண்டி இருந்த போது இடையில் ஆட்டோ டிரைவர் சிவசக்திவேலனை தாக்கி 3பேரும் ஆட்டோவை கடத்தி சென்று விட்டனர். வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
News November 9, 2025
தேனியில் பரவும் குண்டு காய்ச்சல்

தேனி மாவட்டத்தில் தற்போது குளிர் காலம் தொடங்குவதால், சில பசுக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து கால்நடை துறையினர் கூறுகையில், இந்த வகை காய்ச்சல் கொசு மற்றும் ஒரு வித பூச்சி கடியால் ஏற்படுகிறது. கால்களில் குழம்புகளில் முன்னும் பின்னும் குண்டு போன்று ஏற்படும். எனவே இதை குண்டு காய்ச்சல் என்றும் அழைக்கின்றனர். இது 3 நாட்களில் சரியாகி விடும் அச்சம் தேவையில்லை என தெரிவித்தனர்.
News November 9, 2025
தேனி: EB பில் அதிகம் வருகிறதா? இத பண்ணுங்க!

தேனி மக்களே, கொஞ்சமா கரண்ட் யூஸ் பண்ணாலும், அதிகமா பில் வருதா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <


