News September 2, 2024
விநாயகர் சதுர்த்தி விழா குறித்த முன்னேற்பாடு கூட்டம்

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு சட்டம், ஒழுங்கு பராமரிப்பு தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரம்யாதேவி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 6, 2025
புதுகை: தந்தை திட்டியதால் மகன் தற்கொலை

மழையூர் கீழப்பட்டி சேர்ந்த 17 வயது இளைஞர், வம்பன் வேளாண்மை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். தந்தை அமரேசன் செல்போன் பார்க்காதே என (நவ.3) கண்டித்து செல்போனை பறித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்து வீட்டை விட்டு வெளியேறிய இளைஞர், நேற்று அந்த பகுதியில் கிணற்றில் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றிய மழையூர் போலீசார் விசாரணை செய்கினர்.
News November 6, 2025
புதுகை: ரேஷன் குறைதீர் முகாம் அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் குடும்ப அட்டைகள் நியாயவிலை கடை தொடர்பான குறைதீர்க்கும் முகாம், அந்தந்த தாலுகா அலுவலகங்களில் தொடர்புடைய தனி தாசில்தார் முன்னிலையில் (09.11.2025) காலை 10 மணி முதல், மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை பெறுதல் உள்ளிட்ட மனுக்களை பதிவு செய்து பயன்பெற கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
புதுகை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். SHARE IT NOW…


