News August 29, 2025
விநாயகர் சதுர்த்திக்கு சொந்த ஊர் செல்வோர் அதிர்ச்சி!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறிப்பாக கோவை,சேலம், உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களுக்கும் செல்லும் ஆம்னி பேருந்துகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் பயணிகள் ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டியுள்ளது.
Similar News
News August 29, 2025
சேலம்: BA,B.Sc,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

மத்திய அரசின் டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையத்தில் காலியாக உள்ள அசிஸ்டென்ட், ஜூனியர் மேனேஜர் மற்றும் ஆபிசர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.இதற்கு 10th, 12th, Any Degree மற்றும் M.Sc, B.Tech முடித்தவர்கள் <
News August 29, 2025
தபால் தலை சேகரிப்பு வினாடி-வினா போட்டி!

தபால்துறை சார்பில் தபால் தலை சேகரிப்பு வினாடி-வினா போட்டிக்கு பள்ளி மாணவர்கள் கலந்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம். https://tamilnadupost.cept.gov.in/ இணையத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து வரும் செப்.01-ம் தேதிக்குள் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், மேற்கு மண்டலம், கோவை- 641030 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News August 29, 2025
வங்கதேச முகாமில் அகதிகள் போராட்டம்!

சேலம் மாவட்டம், ஆத்தூர் மாவட்ட சிறை, வங்கதேசத்தினர் முகாமாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது இம்முகாமில் 52 ஆண்கள், 20 பெண்கள், 8 குழந்தைகள் என மொத்தம் 81 வங்கதேசத்தினர் தங்க வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மின்சாரம், தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி 30- க்கும் மேற்பட்ட அகதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.