News January 28, 2025
விதிமீறலால் 89 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று கடைகள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம், மாற்று விடுப்பு அளிக்க வேண்டும் என்பது விதிமுறை.இதனை செயல்படுத்தாத தூத்துக்குடி மாவட்டத்தில் 89 நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
குலசையில் துறைமுகம் அமைய சாத்தியமில்லை

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ஏற்கனவே சிறிய ரக துறைமுகம் அமைக்கப்படும் என மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஒரு சில காரணங்களால் அந்தத் துறைமுகம் குலசேகரன்பட்டினத்தில் அமையவில்லை என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக வேறொரு இடத்தில் அதே துறைமுகம் அமையும் என நீர்வழிப் போக்குவரத்து துறை சார்பில் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 27, 2025
தூத்துக்குடி: புகார் தெரிவிக்க எண் வெளியீடு

திருச்செந்தூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதற்கோ அல்லது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருப்பின் 9363779191 என்ற நகராட்சியின் தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 27, 2025
தூத்துக்குடி: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

தூத்துக்குடி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <