News September 15, 2025
விடைபெற்றது கோவை போலீஸின் ‘சாரா’

கோவை காவல்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய மோப்பநாய் சாரா உயிரிழந்தது. 2016ல் லாப்ரடோர் ரெட்ரீவர் இனத்தை சேர்ந்த சாரா பணியில் இணைந்து, டிராக்கர் பணியில் 103க்கும் மேற்பட்ட அழைப்புகளின் அடிப்படையில் சேவையாற்றியது. 2024ல் ஓய்வு பெற்ற பின்னர், சிறுநீரக குறைபாட்டால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தது. போலீசார் மரியாதை செலுத்தி, போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.
Similar News
News September 15, 2025
கோவை: இன்ஜினியர்களுக்கு மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc, B.E., B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 15, 2025
ராணுவ பணிக்கான எழுத்து தேர்வு 1040 பேர் அப்செண்ட்!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நேற்று ஒருங்கிணைந்த ராணுவ தேர்வுகள் (தொகுதி-II) கோவையில் 4 மையங்களில் நடைபெற்றது. போலீசாரால் தேர்வு மையங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆர்எஸ்புரம் மாநகராட்சி மகளிர் பள்ளி, பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி, அவினாசிலிங்கம் கல்லூரி வளாகங்களில் 4 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் 2349 பேர் தேர்வு எழுதினர். 1040 பேர் தேர்வு எழுத வரவில்லை.
News September 15, 2025
கோவை: தபால் சேவை இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவு!

கோவையில் விரைவு தபால் (எக்ஸ்பிரஸ் மெயில்) சேவை துவங்கி இன்று 38 ஆண்டுகள் நிறைவு செய்கிறது. கோடிக்கணக்கான கடிதங்களை வேகமாகவும் பாதுகாப்பாகவும் சென்றடையச் செய்யும் வகையில் மத்திய அரசு 1986 ஆகஸ்ட் 1-ம் தேதி இச்சேவையை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் மும்பை, கோல்கட்டா உட்பட 14 நகரங்கள், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட ஏழு நாடுகளில் மட்டுமே இருந்த இது, தற்போது நாடு முழுவதும் விரிவடைந்துள்ளது.