News March 26, 2025
விடுமுறையில் மாணவர்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

அரக்கோணம் டிஎஸ்பி ஜாபர்சித்திக் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கோடை காலம் தொடங்கி கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. கோடை விடுமுறையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அருகே உள்ள குளம் குட்டை ஆறுகள் ஏரி, கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு செல்லாதவாறு பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
ராணிப்பேட்டை: Diploma/ ITI முடித்திருந்தால் 1லட்சம் வரை சம்பளம்

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) காலியாக உள்ள 764 Senior Technical Assistant மற்றும் Technician பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் ITI முடித்திருந்தது 18 முதல் 28 வயது உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.1,12,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன-01 குள் <
News December 19, 2025
ராணிப்பேட்டை: வாகனம் மோதி வாலிபர் பலி

ஜோதிமோட்டூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், திருத்தணியைச் சேர்ந்த மதன் (30) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். பாராஞ்சி சாலையில் சென்றபோது இந்த விபத்து நேரிட்டது. தகவலறிந்து வந்த சோளிங்கர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனத்தைக் கண்டறிய, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்கின்றனர்.
News December 19, 2025
ராணிப்பேட்டை: மனவேதனையில் விவசாயி விவரித முடிவு!

காவேரிப்பாக்கத்தை அடுத்த அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 52), மண்பாண்ட செய்யும் தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை. இதனால், மனமுடைந்த அவர் டிச-17 வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


