News November 16, 2024
விடுதி காப்பாளர் பணியிடை நீக்கம்
அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆதிதிராவிடர் நலவிடுதி காப்பாளர் நாகூர்முத்துவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஸ்ரீதர் நேற்று உத்தரவிட்டுள்ளார். ஆய்வுக்கு செல்லும்போது காப்பாளர் நாகூர் முத்து பணியில் இல்லாததால் அவரை பணியிடம் நீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Similar News
News November 18, 2024
புதுகையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 22ஆம்தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
News November 18, 2024
மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி
புதுகை மாவட்டத்தில் உள்ள 760 வருவாய்க் கிராமங்களிலும் மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாக கலெக்டர் மு.அருணா தெரிவித்தார். நேற்று திருமயம் வட்டம் மணவாளன்கரை கிராமத்தில் நடைபெறும் கணக்கெடுப்பு பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ரவிச்சந்திரன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) கு.அழகுமலை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News November 18, 2024
புதுகையில் 12,889 பேர் விண்ணப்பம்
புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 1,561 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் சிறப்பு முகாம் 2 நாட்காளக நடைபெற்றது. இதில் புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். இரண்டு நாட்களில் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 12,889 பேர் விண்ணப்பித்துள்ளனர்.