News June 7, 2024

விடுதிகளுக்கான மாணவர் சேர்க்கை அழைப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்காசி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கான 29 விதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளுக்கான மாணவர் சேர்க்கை ஜூன் 14ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.

Similar News

News July 9, 2025

தென்காசியில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

image

தென்காசி மாவட்ட சங்கம் மருத்துவமனை மூலம் மருத்துவம் மற்றும் யோகா சார்ந்த பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயதுவரம்பு 40. மாத ஊதியம் ரூ.15,000. விண்ணப்பிக்க கடைசி நாள் – ஜூலை 16. www.tenkasi.nic என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளவும்.

News July 8, 2025

தென்காசியில் மனுநீதி நாள் முகாம் – ஆட்சியர் பங்கேற்பு

image

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டத்திற்கு உட்பட்ட மருதம் கிணறு கிராமத்தில் வருகிற ஜூலை.09 காலை 11 மணியளவில் நடைபெற உள்ள மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கலந்து கொள்ள உள்ளார். மருதம் கிணறு கிராமத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை கோரிக்கை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

News July 8, 2025

10 ஆம் வகுப்பு போதும் – ரயில்வேயில் வேலை

image

தென்காசி மக்களே இந்தியன் ரயில்வேயில் 6238 டெக்னீசியன் காலி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் https://www.rrbapply.gov.in என்ற இணையம் மூலம் ஜூலை 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை சம்பளம் வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உடனே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!