News March 19, 2024
விடிய விடியஆண்களுக்கு விருந்து

நத்தம் அருகே உலுப்பக்குடியில் வேட்டைக்காரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல நூறு ஆண்டுகளாகவே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. நேற்று நள்ளிரவில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த பின்னர் நேர்த்திக்கடனாக 50 ஆடுகள் பலியிடப்பட்டு ஒரே இடத்தில் சமைக்கப்பட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு விடிய விடிய பிரசாதமாக வழங்கப்பட்டது.இதில் ஏராளமான ஆண்கள் பங்கேற்றனர்.
Similar News
News November 3, 2025
திண்டுக்கல்: B.E போதும் வேலை ரெடி!

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 3, 2025
திண்டுக்கல்: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

திண்டுக்கல் மக்களே.. உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க https://tnurbanepay.tn.gov.in/LandingPage.aspx# என்ற இணையதளம் சென்று உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 3, 2025
திண்டுக்கல்லில் கண்ணீர் விட்டு கதறி அழுத உறவினர்கள்!

திண்டுக்கல்லில் நேற்று (நவ.2) கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளை முன்னிட்டு இறந்தவர்களின் நினைவை போற்றும் வகையில், திருச்சி ரோட்டில் உள்ள கல்லறைத் தோட்டத்தில், பூக்கள், மெழுகுவர்த்தி, வைத்து அஞ்சலி செலுத்தினர்.புனித லாசர் சர்ச் பாதிரியார்கள் திருப்பலி நடத்தினர்.அப்போது இறந்து போனவர்களை நினைத்து, கல்லறைகளில் கண்ணீர் விட்டு உறவினர்கள் கதறி அழுதனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


