News December 22, 2025
விஜய் ஹசாரேவில் களமிறங்கும் கேப்டன் கில்

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இந்திய வீரர்கள் அனைவரும் களம் காண வேண்டும் என BCCI அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து விராட், ரோஹித் உள்ளிட்ட வீரர்கள் VHT தொடரில் விளையாட தயாராக உள்ளனர். இந்நிலையில் இந்திய டெஸ்ட் மற்றும் ODI கேப்டன் சுப்மன் கில் VHT-ல் பஞ்சாப் அணிக்காக களம் காண்கிறார். சமீபத்தில் வெளியான டி20 உலகக்கோப்பை அணியில் இருந்து கில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 26, 2025
பொங்கல் பரிசு: ரேஷன் கார்டுகளுக்கு புதிய அப்டேட்

புதிய ரேஷன் கார்டு எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அரசிடமிருந்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பை அரசு ஓரிரு நாளில் அறிவிக்கவுள்ள நிலையில், தங்களுக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் புதிய கார்டுக்கு விண்ணப்பித்துள்ள 2 லட்சம் பேருக்கு எழுந்தது. இந்நிலையில், பொங்கல் தொகுப்பு விநியோகம் தொடங்கும் நாளில் உங்கள் கையில் புது கார்டு இருந்தால் உங்களுக்கும் பொங்கல் பரிசு கிடைக்குமாம்.
News December 26, 2025
சீக்ரெட் செல்போனால் மனைவி கொலை!

தனக்கு தெரியாமல் ரகசியமாக மொபைல் மனைவியை கொலை செய்து, உடலை வீட்டின் பின்புறம் கணவரே புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி மாநிலம் கோரக்பூரை சேர்ந்த அர்ஜுன், முதலில் தனது மனைவி குஷ்பூ காணாமல் போனதாக நாடகமாடினார். பின் போலீசார் விசாரணையில் திருமணமாகி 2 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
News December 26, 2025
21 ஆண்டுகளை கடந்தும் ஓயாத சுனாமியின் துயரம் (PHOTOS)

ஆழிப்பேரலையின் தாண்டவத்தால் TN-ல் சுமார் 8,000 பேர் உயிரிழந்த துயரம் நிகழ்ந்து இன்றுடன் 21 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தாய், தந்தை, பிள்ளைகள் என உறவுகளை இழந்தவர்கள் ஆறாத வடுவுடன் கண்ணீர் மல்க கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். எனது உறவுகளை திருப்பிக்கொடு என கடல் அன்னையிடம் ஒரு சிலர் மன்றாடியது காண்போரின் நெஞ்சங்களை உலுக்கியது. கடல் அலைகள் எழுப்பும் ஒலி அவர்களின் காதில் சோக கீதமாகவே ஒலிக்கிறது.


