News October 27, 2024

விஜய் மாநாட்டுக்கு சென்றவர் பலி

image

சென்னையில் இருந்து விஜய் மாநாட்டுக்கு சென்ற இளைஞர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள்ளது. பெரியமேடு பகுதியில் இருந்து அந்த இளைஞர் பைக்கில் சென்றுள்ளார். டி.எம்.எஸ். அருகே சென்று கொண்டிருந்தபோது, பைக் மீது மணல் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது விஜய் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News February 16, 2026

BREAKING: சென்னை- பிரபல மாலில் தீ விபத்து

image

சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் மாலில் இன்று (பிப்.16) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஃபோரம் மாலில் உள்ள முதல் தளத்தில் உள்ள உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை அடுத்த வணிகவளாகத்தில் இருப்பவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் தீயை அணைக்கும் பணியில் வணிகவளாக நிர்வாகம் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

News February 16, 2026

சென்னை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

சென்னை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 16, 2026

சென்னையில் சோலார் பேனல் பொருத்தும் பயிற்சி

image

தமிழக, ஆதி திராவிடர் வீட்டு வசதி, மேம்பாட்டு கழகம், டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் இணைந்து, ஆதி திராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு சோலார் பேனல் பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் தாட்கோ tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!