News April 3, 2026

விஜய் மத அரசியல் செய்கிறார்: கருணாஸ்

image

பாஜகவை விட மோசமான மத அரசியலை விஜய் செய்வதாக கருணாஸ் சாடியுள்ளார். இத்தனை நாள்கள் தன்னுடைய மத அடையாளத்தை விஜய் காட்டவில்லை என்ற அவர், தேர்தல் நேரத்தில் மட்டும் தன்னை ஜோசப் விஜய் என அடையாளம் காட்டுவது ஏன் என மக்கள் கேட்பதாகவும் கூறியுள்ளார். கூட்டத்தை வைத்து வெற்றியை முடிவு செய்ய முடியாது; கரகாட்டம் நடந்தால் கூட கூட்டம் வரும் என்பதால் வாக்குகளே வெற்றிக்கு முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 10, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,000 உயர்ந்தது

image

தங்கம் விலை இன்று (ஏப்.10) சவரனுக்கு ₹1,000 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. 1 கிராம் தங்கம் ₹125 உயர்ந்து ₹14,125-க்கும், 1 சவரன் ₹1,000 அதிகரித்து ₹1,13,000 -க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நம்மூர் சந்தையிலும் தங்கம் விலை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

News April 10, 2026

மாற்று வேட்பாளர் விமர்சனத்திற்கு சீமான் பதிலடி

image

சீமானுக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி மனு தாக்கல் செய்தது சர்ச்சையானது. இதுகுறித்த கேள்விக்கு, உயிர் துணை, அதனால் இதிலும் துணை என சீமான் பதிலடி கொடுத்துள்ளார். அரசியலில் 117 பெண்களுக்கு இடம் கொடுத்த தன்னை, பெண்ணின் வாய்ப்பை பறிப்பதாக பேசுவது ஏற்புடையது அல்ல என்றார். எப்படி பார்த்தாலும் சீமான் இன்னொரு பெண்ணுக்குதான் வாய்ப்பு கொடுக்கிறான் என பெருமையாக பேச வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

News April 10, 2026

தவெக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார்

image

தன்னை ஏமாற்றி கைவிட்டுவிட்டதாக தவெக பொருளாளரும், மயிலாப்பூர் வேட்பாளருமான வெங்கடரமணன் மீது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 6 ஆண்டுகளாக இத்தம்பதி பிரிந்து வாழும் நிலையில், ஒருமுறை தன்னை அபார்ஷன் செய்யச் சொல்லி வற்புறுத்தியதாக அவர் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். தனது குழந்தையை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டு பல ஆண்டுகளாக குழந்தையை காட்டாமல் உள்ளார் என்றும் புகாரளித்துள்ளார்.

error: Content is protected !!