News December 24, 2025
விஜய் புதுசா முளைச்ச ஈ: முத்தரசன்

ஓட்டை பிரிக்கத்தான் விஜய்யை பாஜக, கட்சி ஆரம்பிக்க சொல்லி இருப்பதாக CPI-ன் முத்தரசன் சாடியுள்ளார். புதுசா ஒரு கட்சி இருக்கு, புதுசா முளைச்ச ஈ, இன்னும் றெக்கையே முளைக்கல, சிலந்தி வலையில் மாட்டி இருக்கு என அவர் தவெகவை கடுமையாக விமர்சித்துள்ளார். 2026 தேர்தலில் விஜய்<<18649356>> ஒரு Spoiler<<>> என பியுஷ் கோயல் சொன்னதாக ஒரு தகவல் வெளியான நிலையில் முத்தரசன் இந்த விமர்சனங்களை வைத்துள்ளார்.
Similar News
News February 8, 2026
இரவு தூங்கும்போது உடல் வலி ஏற்படுகிறதா? எச்சரிக்கை

இரவு நேரத்தில் ஏற்படும் உடல் வலி, பெரும்பாலும் தசைப்பிடிப்பு அல்லது மூட்டுத் தேய்மானத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். பகலில் வேலை, சத்தம் என கவனம் சிதறடிக்கப்படுவதால் வலி தெரிவதில்லை. இரவு படுக்கையில் அந்த வலியை கடுமையாக உணர முடிகிறது. எரிச்சல் அல்லது ஊசியால் குத்துவது போன்ற வலியின் காரணமாக தூக்கம் பாதிக்கப்படலாம். இது தொடர்ச்சியாக ஏற்பட்டால் டாக்டரை அணுகுவது அவசியம்.
News February 8, 2026
விஜய்யுடன் சசிகலா கூட்டணியா?

ஜெயலலிதா பிறந்த நாளான வரும் பிப்.24-ம் தேதி ராமநாதபுரம் (அ) மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த சசிகலா முடிவு செய்துள்ளார். அப்போது தனிக்கட்சி அறிவிப்பை அவர் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தவெகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவிலும் சசிகலா உள்ளதாகவும் அவரது வட்டாரத்தில் கூறப்படுகிறது. சசிகலாவின் இந்த திடீர் முடிவு EPS, TTV தினகரன் ஆகியோருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
News February 8, 2026
உங்கள் உடல் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் சிறுநீர்!

சிறுநீர் பரிசோதனை மூலம் பல நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய முடியும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தாலோ அல்லது ரத்தம் சேர்ந்து வந்தாலோ, அது கல்லீரல் அல்லது சிறுநீரக கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீர் துர்நாற்றம் வீசினால், ஏதேனும் தொற்று இருக்கலாம். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகி பரிசோதனை செய்வது அவசியம்.


