News December 18, 2025
விஜய் பரப்புரையில் சிக்கி 3 பேர் ICU-வில் சிகிச்சை

ஈரோட்டில் நடந்த விஜய்யின் பரப்புரையின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு, 3 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், அவர்கள் ICU-வில் சிகிச்சையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வலிப்பு, மயக்கம், உடல் சோர்வு ஆகிய காரணங்களால் அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பெண் உள்பட மேலும் சிலர் கூட்டத்திலேயே மயங்கி விழுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 19, 2025
PM மோடி கார்கள் எவ்வளவு கோடி தெரியுமா?

PM மோடி பயன்படுத்தும் வாகனங்கள் மிகவும் விலை உயர்ந்தவையாக இருக்கின்றன. இந்த கார்கள் அனைத்தும் ஏவுகணை தாக்குதலை தாங்கும் தன்மை, டயர்கள் பஞ்சர் ஆனாலும் ஓடும் தன்மை, மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தவை. அந்த வகையில், என்னென்ன கார்கள் உள்ளன, அவற்றின் மதிப்பு என்னவென்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 19, 2025
மாணவர்களுக்கு ₹10,000 தரும் முதல்வர் திறனாய்வு தேர்வு!

முதல்வர் திறனாய்வு தேர்வுக்கு 10-ம் வகுப்பு மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். ஜன.31-ல் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியான 1,000 மாணவர்களுக்கு, ஒரு கல்வியாண்டுக்கு தலா ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும். www.dge.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யலாம். அதனை டிச.26-க்குள் பூர்த்தி செய்து HM-இடம் ஒப்படைக்க அரசு அவகாசம் வழங்கியுள்ளது. SHARE IT.
News December 19, 2025
பாமக யாருடன் கூட்டணி? ராமதாஸ் அறிவிக்கிறார்

பாமக தலைவராக <<18610833>>அன்புமணியை<<>> தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், அவர் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து டிச.29-ம் தேதி சேலம் பொதுக்குழுவில் ராமதாஸ் அறிவிக்க இருப்பதாக ஜிகே மணி தெரிவித்துள்ளார். அன்புமணியின் பேச்சுகளால் பலமுறை ராமதாஸ் கண்கலங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


