News December 8, 2025

விஜய் பரப்புரைக்கு TN-ல் இருந்து யாரும் வராதீங்க: TVK

image

புதுச்சேரியில் நாளை நடைபெறவுள்ள விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு TN-ல் இருந்து யாரும் வர வேண்டாம் என புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். உப்பளத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டுள்ளன. இதனால், கடலூர், விழுப்புரத்திலிருந்து கூட்டம் வரும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News April 5, 2026

ராசி பலன்கள் (05.04.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News April 5, 2026

மூக்கிற்கும் உதட்டிற்கும் நடுவில் இருப்பது என்ன தெரியுமா?

image

மூக்கிற்கும் உதட்டிற்கும் நடுவில் இருக்கும் பகுதியை என்னவென்று சொல்வார்கள், இது ஏன் குழிவாக இருக்கிறது தெரியுமா? வாங்க அதற்கு விடை காண்போம். இதனை ஆங்கிலத்தில் ‘Philtrum’ என அழைக்கின்றனர். இந்த ஃபில்ட்ரத்தின் வடிவம், ஆழம், நீளம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இப்பகுதியில் முகத் தோல் மடிந்து இருக்கும். இந்த கூடுதல் தோல், கீழே இருக்கும் தசைகள், மேல் உதட்டை நன்றாக அசைக்கவும் சிரிக்கவும் உதவுகிறது.

News April 5, 2026

திமுகவை எதிர்க்கும் Ex திமுக வேட்பாளர்

image

2021 தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு 2,400 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றவர் TR சண்முகசுந்தரம். இம்முறை அவருக்கு சீட் கொடுக்காமல், கவிதா கல்யாண சுந்தரத்துக்கு திமுக சீட் வழங்கியது. இதனால் அதிருப்தி அடைந்த <<19565164>>TR சண்முகசுந்தரம் கட்சியிலிருந்து விலகிய<<>> நிலையில், சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். <<-se>>#TNElection20926<<>>

error: Content is protected !!