News January 17, 2026

விஜய் படம் ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

‘ஜன நாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போனதால் ஏமாற்றத்தில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு ஜன.23-ல் ’தெறி’ ரீரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கான டிரெய்லர் நாளை ரிலீஸாகிறது. இதன்மூலம் அதே நாளில் ரீரிலீஸாகவுள்ள ‘மங்காத்தா’ படத்துடன் தெறி மோதுகிறது. இதனால் விஜய் – அஜித் ரசிகர்கள் படுகுஷியில் உள்ளனர். என்னப்பா படத்துக்கு டிக்கெட் புக் பண்ணிடலாமா?

Similar News

News January 24, 2026

நாகர்கோவிலில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

image

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பரக்கத் நகரில் 36 வயது வாலிபர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கோட்டார் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 24, 2026

எந்த தகுதியும் இல்லாதவர் உதயநிதி: EPS

image

இளைஞரணி தலைவர், MLA, அமைச்சர், DCM என எந்த தகுதியும் இல்லாத உதயநிதியை CM ஸ்டாலின் ஆளாக்கிவிட்டார் என்று EPS விமர்சித்துள்ளார். அடுத்து எந்த காலத்திலும், எந்த பதவிக்கும் கருணாநிதி குடும்பம் வர முடியாது என்ற அவர், இந்த தேர்தல் தான் திமுகவுக்கு இறுதியான தேர்தல் என்றார். மேலும், தீயசக்தி திமுகவை வீழ்த்துவோம் எனவும் எம்ஜிஆர், அம்மா இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நிறைவேற்றுவோம் என்றும் உறுதியளித்தார்.

News January 24, 2026

இஞ்சி டீ குடிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

image

இஞ்சி டீ-யில் மருத்துவ குணங்கள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இஞ்சியின் தினசரி பயன்பாடு 4 கிராமுக்கு மேல் சென்றால் வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், பித்த நீர் அதிகமாக சுரக்கும் என்பதால் பித்தப்பை கல் பிரச்னை உள்ளவர்கள் இஞ்சி டீயை தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.

error: Content is protected !!