News November 7, 2025
விஜய் நடத்தியது பித்தலாட்டம்: வைகோ

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை, சென்னைக்கு அழைத்து வந்து விஜய் ஆறுதல் கூறியது பித்தலாட்டம் என்று வைகோ விமர்சித்துள்ளார். சம்பவம் நடந்தபோது விஜய் ஏன் திருச்சியில் தங்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள வைகோ, உயிரிழப்பு செய்தி அறிந்ததும் சென்னை ஓடிச்சென்று விட்டதாக விமர்சித்துள்ளார். யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என CM பேசிய பின்பும், சகட்டு மேனிக்கு பேசியுள்ளதாக சாடியுள்ளார்.
Similar News
News February 7, 2026
SBI சேவை கட்டணம் உயர்கிறது

IMPS பணப்பரிமாற்றத்திற்கான சேவை கட்டணத்தை SBI உயர்த்தியுள்ளது. அதன்படி, முன்னதாக இலவசமாக இருந்த ₹25,000 – ₹1 லட்சம் வரையிலான பரிவர்த்தனைக்கு தற்போது ₹2+GSTயும், ₹1 லட்சம் – ₹2 லட்சத்துக்கு ₹6+GSTயும், ₹2 லட்சம் – ₹5 லட்சத்துக்கு ₹6+GSTயும் வசூலிக்கப்படும். மொபைல் பேங்கிங், YONO செயலி மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு இந்தக் கட்டணங்கள் பொருந்தும். இது பிப்.15 முதல் அமலுக்கு வருகிறது.
News February 7, 2026
பாமக வந்தால் விசிக விலகும்: திருமாவளவன் திட்டவட்டம்

திமுக கூட்டணிக்கு ராமதாஸ் தரப்பு பாமக வந்தால், கூட்டணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக தனியார் TV நேர்காணலில் திருமாவளவன் கூறியுள்ளார். சாதியின் அடிப்படையிலான வெறுப்பு அரசியலை பாமக பரப்புவதாக கூறிய அவர், பிளவு அரசியல் செய்பவர்களுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு, கூட்டணி விவகாரத்தில் திமுகவின் முடிவில் விசிக தலையிடாது என பேசியிருந்தார்.
News February 7, 2026
ஆபாச படம் பார்க்கிறீர்களா.. 7 ஆண்டு சிறை உறுதி

ஸ்மார்ட் போன்களை வாழ்வின் ஒரு அங்கமாகவே கொண்டுள்ள இன்றைய உலகில் பலரும் பாலியல் வீடியோக்களுக்கு அடிமைகளாக உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. சிறார் பாலியல் வீடியோக்கள் (Child Videos) பார்ப்பதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனராம். இதனை பார்த்தால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ₹10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்பதை மறவாதீர்கள். இம்மாதிரியான தேடுதல் போலீஸாரால் கண்காணிக்கப்படுவதையும் நினைவில் கொள்ளுங்கள்.


