News January 3, 2026
விஜய், தோனியின் முடிவு.. சோகத்தில் ரசிகர்கள்

திரையுலகிலும், விளையாட்டிலும் எப்போதுமே நமக்கு பிடித்தமானவர்கள் ஓய்வுபெறும் போது நெஞ்சம் வலிக்கும். அந்த வகையில், இந்தாண்டுக்கு பிறகு விஜய்யை திரைப்படங்களில் பார்க்க இயலாது. IPL 2026 உடன் தோனி ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது. ஜாம்பவான்கள் மெஸ்ஸி, ரொனால்டோ 2026 ஃபிபா உலகக் கோப்பையுடன், சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெறலாம். இதனால், அவர்களது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
Similar News
News February 2, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 599 ▶குறள்: பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
▶பொருள்: யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.
News February 2, 2026
மத்திய பட்ஜெட்டில் இதற்கு ₹10,000 கோடி

இந்தியாவை ஓர் உலகளாவிய உயிர்காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்யும் மையமாக மேம்படுத்த ‘பயோ ஃபார்மா சக்தி’ திட்டத்தை FM நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் முன்மொழிந்தார். இத்திட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளில் ₹10,000 கோடி நிதி ஒதுக்கப்படும். இதன் மூலம், விலை உயர்ந்த மருந்துகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதுடன், அவை பொதுமக்களுக்கு குறைந்த விலையிலேயே கிடைக்க வழிவகை செய்யப்படும்.
News February 2, 2026
ஜிஎஸ்டி வசூல் ₹1.93 லட்சம் கோடி

கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி ₹1.93 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2025 ஆண்டு ஜனவரி மாதம் ₹1.84 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் இந்தாண்டு 6.2% அதிகரித்துள்ளது. இதில் உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாய் ₹1.41 லட்சம் கோடி என்றும், தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் 5% உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


