News November 21, 2025
விஜய் சினிமா டயலாக்குகளை மட்டுமே பேசுகிறார்: வைகோ

அடுத்த ஆட்சி நம்முடையதுதான் என விஜய் பேசி வருவது ஒருபோதும் நடக்காது என வைகோ தெரிவித்தார். கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை, சென்னைக்கு அழைத்து சந்தித்தது அவரின் பொறுப்பற்ற செயல் எனவும் சாடினார். அவர் சினிமா டயலாக்குகளை மட்டுமே பேசி வருவதாகவும், CM ஸ்டாலினை Uncle என சொல்வதெல்லாம் தெனாவட்டு என்றும் விமர்சித்துள்ளார்.
Similar News
News November 21, 2025
மதுரை: 5,810 காலியிடங்கள்.. மீண்டும் ஒரு வாய்ப்பு! APPLY

மதுரை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கு நவ.20 கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News November 21, 2025
உணவு செரிமானமாக எடுத்துக் கொள்ளும் நேரம் தெரியுமா?

உணவு வயிற்றுக்கு சென்றால் போதும், அதுவாக செரித்துவிடும் என்று நினைப்போம். ஆனால், ஒவ்வொரு உணவு வகையும் நம் உடலில் ‘பயணம்’ செய்ய ஒரு நேரத்தை எடுத்துக்கொள்கிறது. நமது உடலில் ஜீரண மண்டலமும் அப்படித்தான் இயங்கி வருகிறது. அதனால் தான் சரியான முறையில் உணவு உண்ண வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள். எந்த உணவுகள் எவ்வளவு நேரத்தில் ஜீரணமாகின்றன என்பதை தெரிந்து கொள்ள மேலே உள்ள போட்டோக்களை SWIPE பண்ணி பாருங்க.
News November 21, 2025
நாளை உருவாகிறது புயல் சின்னம்.. கனமழை வெளுக்கும்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது, 26-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் 25-ம் தேதி வரை டெல்டா, தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. குறிப்பாக, நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று(நவ.21) கனமழைக்கு வாய்ப்புள்ளது. உங்கள் ஊரில் மழையா?


