News February 24, 2026

விஜய் கொள்ளையடித்த பணத்தை.. RS பாரதி

image

கொள்ளையடித்த பணத்தை பங்கீடு செய்வதால் திமுக கூட்டணி ஒரு கல்லாப்பெட்டி கூட்டணி என்று விஜய் விமர்சித்திருந்தார். இந்நிலையில், சென்னை HC-ஆல் ஒன்றரை ₹1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நபர் தங்களைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளதாக RS பாரதி பதிலடி கொடுத்துள்ளார். விஜய்யை முதலில் அவர் கொள்ளையடித்த பணத்தை வெளியே எடுத்து வரச் சொல்லுங்கள் என்றும் ஆவேசமாக பேசியுள்ளார்.

Similar News

News February 26, 2026

தஞ்சையில் அடுத்த பரப்புரை.. விஜய்யின் பிளான்

image

சேலம், வேலூரை தொடர்ந்து தஞ்சாவூரில் விஜய், தவெக நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 2-ம் வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ள தவெக நிர்வாகிகள், விரைவில் போலீசிடம் அனுமதி கேட்டு கடிதமும் வழங்கவுள்ளனர். கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில், தஞ்சை நகருக்கு வெளியே 3 இடங்களை தவெகவினர் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

News February 26, 2026

BREAKING: இந்தியா பேட்டிங்

image

இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்களாக ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக சஞ்சு சாம்சன், அக்சர் படேல் பிளேயிங் 11-ல் இடம்பெற்றுள்ளனர். அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க இப்போட்டியில் இந்தியா வெற்றிபெறுவது அவசியமாகும்.

News February 26, 2026

‘நான் சாகப் போகிறேன்.. I Love You அம்மா’

image

ஹைதராபாத்தை சேர்ந்த இளம் யூடியூபர் கோமலி(21), தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குவைத்தில் உள்ள தனது தாய்க்கு, ‘I Love You So Much, தம்பியை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்’ என மெசேஜ் அனுப்பிவிட்டு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த கோமலி, இந்த விபரீத முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை உணருங்கள்!

error: Content is protected !!