News January 4, 2026

விஜய் கூட்டத்தில் கவனம் ஈர்த்த ஈஷா சிங் IPS டிரான்ஸ்பர்!

image

தவெக பொதுக்கூட்டத்தில் ஸ்ட்ரிக்ட் ஆபிசராக சுழன்றடித்த புதுச்சேரி SSP ஈஷா சிங் டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூர் துயரத்துக்கு பிறகு முதல்முறையாக புதுச்சேரியில் நடந்த திறந்தவெளி பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்றார். அப்போது தொண்டர்களை அனுமதிப்பதில் குளறுபடி ஏற்பட்டபோது, துணிச்சலுடன் கூட்டத்தை கட்டுப்படுத்தி ஈஷா சிங் கவனம் பெற்றார். இந்நிலையில் அவர் தற்போது டிரான்ஸ்பர் ஆகியுள்ளார்.

Similar News

News February 2, 2026

விஜய் ஊழல்வாதி தானே? திண்டுக்கல் சீனிவாசன்

image

பொது எதிரி என பாஜகவை கூறும் விஜய், அக்கட்சியை விமர்சிக்காதது ஏன் என திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சிக்கும் விஜய் ஊழல்வாதி தானே, அவர் சம்பாதித்தது கருப்பு பணமா, வெள்ளை பணமா என சாடினார். மேலும், ஆதவ் அர்ஜுனா நேர்மையான வழியில் சம்பாதித்தாரா என்றும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து சிறை சென்றவர் தானே செங்கோட்டையன் எனவும் விமர்சித்துள்ளார்.

News February 2, 2026

PM KISAN திட்டத்தின் நிதி ₹10,000?.. CLARITY

image

PM KISAN திட்டத்தின் கீழ், நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக மத்திய அரசு ₹6,000 வழங்கி வருகிறது. இந்த தொகையை ₹10,000 ஆக உயர்த்துமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட நிலையில், அப்படி எதுவும் இடம்பெறவில்லை. இத்திட்டத்தின் 22-வது தவணைத் தொகை (₹6,000) இந்த வாரத்திற்குள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

News February 2, 2026

69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

image

ஒரு பிரசவமே கடினமாகிவிட்ட நிலையில், இவரின் கதை ஒரு அதிசயமே! ரஷ்யாவை சேர்ந்த Feodor Vassilyev என்பவரின் மனைவி, Valentina Vassilyev 1725- 1765 ஆண்டுகளுக்கு இடையில், 27 பிரசவங்களில் 69 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதில் 16 இரட்டையர்கள்,7 triplets (ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்), 4 quadruplets (ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்) பிரசவங்களும் அடங்கும். அதிக குழந்தைகளை பெற்றெடுத்த கின்னஸ் சாதனை இவருடையதே!

error: Content is protected !!