News February 24, 2026

விஜய் காமெடி செய்கிறார்: கடம்பூர் ராஜு

image

திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் போட்டி என பேசி விஜய் காமெடி செய்கிறார் என கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலை விஜய் புறக்கணித்ததை சுட்டிக்காட்டிய அவர், MGR கட்சி ஆரம்பித்த 6 மாதத்தில் தேர்தலை சந்தித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின் வரலாறு தம்பி விஜய்க்கு தெரியாது என்றும், இன்றைய தேர்தல் களத்தில் அதிமுகவுக்கு போட்டி யாருமே இல்லை எனவும் கூறியுள்ளார்.

Similar News

News February 26, 2026

7 தொகுதிகள், தனிச் சின்னம்.. பாரிவேந்தரின் டிமாண்ட்!

image

NDA கூட்டணியில் உள்ள IJK-வின் நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் ரவி பச்சைமுத்து ஆகியோர் EPS-ஐ நேரில் சந்தித்து பேசினர். அப்போது, வரும் தேர்தலில் IJK போட்டியிட விரும்பும் 7 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாரிவேந்தர் வழங்கியுள்ளார். மேலும், இத்தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் IJK-வுக்கு 2 – 3 தொகுதிகள் வரை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News February 26, 2026

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் குறைந்தது!

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. காலையில் 1 அவுன்ஸ்(28g) $5,208 ஆக இருந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி $21 குறைந்து (₹1,908) மளமளவென குறைந்து $5,187 ஆக உள்ளது. வெள்ளி விலையும் $2.33 ஆக குறைந்துள்ளது. இதனால் இந்திய சந்தையிலும் வரும் நாள்களில் தங்கம் விலை குறையும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இது நகைப் பிரியர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.

News February 26, 2026

யார் தான் காங்கிரஸ்? ஒன்னுமே புரியலங்க..

image

ஆட்சி அதிகாரத்தில் பங்கு, தவெகவுடன் பேச்சுவார்த்தை என தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில், இது அவரது தனிப்பட்ட கருத்து என செல்வப்பெருந்தகை, விஜய் வசந்த் ஆகியோர் கூறியுள்ளனர். தமிழக காங்., கட்சி மேலிட பொறுப்பாளர் கூறுவதையே சொந்த கருத்து என சக கட்சியினர் கூறுவதால், யார் கூறுவதை தான் கட்சியின் நிலைப்பாடாக எடுப்பது என தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

error: Content is protected !!