News August 21, 2024
விஜய் கட்சி கொடியில் இடம்பெறும் லோகோ

நாளை கட்சிக்கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு, தவெக தலைவர் விஜய் சார்பில், காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தவெக அறிக்கைகளில் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வாசகம் இடம்பெறும். அதை மையமாக வைத்து புதிய லோகோ தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக, வெற்றியை குறிக்கும் வகையில் வாகை மலர் இடம்பெற உள்ளதாகவும் கூறப்பட்டது.
Similar News
News April 2, 2026
அமைச்சரவைக்கு கவர்னர் கட்டுப்பட்டவர்: HC

அமைச்சரவையின் பரிந்துரைகளை தன்னிச்சையாக கவர்னர் நிராகரிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கும் அமைச்சரவை பரிந்துரையை கவர்னர் நிராகரித்ததை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் அமர்வு அமைச்சரவைக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் என திட்டவட்டமாக கூறியது.
News April 2, 2026
BREAKING: தங்கம் விலை ஒரேநாளில் ₹2,400 குறைந்தது

தங்கம் விலை காலையில் சவரனுக்கு ₹800 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ₹1,600 சரிந்து நடுத்தர மக்கள் மற்றும் நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹13,750-க்கும், 1 சவரன் ₹1.10 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், வெள்ளி விலை மாற்றமின்றி கிலோ ₹2.55 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. SHARE IT
News April 2, 2026
BREAKING: குவாரி முறைகேடு வழக்கில் பொன்முடி விடுதலை

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் பொன்முடி, அவரது மகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து விழுப்புரம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண்ணை வெட்டி எடுத்து, அரசுக்கு ₹28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அவர்கள் மீது 14 ஆண்டுகளுக்கு முன் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை எனக்கூறி அனைவரையும் கோர்ட் விடுவித்துள்ளது.


