News November 4, 2025

விஜய் கட்சியில் இருந்து விலகினார்

image

தவெகவில் இருந்து விலகிய காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய Ex தலைவர் R.ஜெகன் பாஜகவில் இணைந்துள்ளார். மேலும், அவரது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோரும் பாஜகவில் சேர்ந்தனர். கரூர் சம்பவம் நடந்து 1 மாதம் ஆன நிலையில், கட்சியில் அதிரடி மாற்றங்களை விஜய் செய்து வருகிறார். <<18184151>>மகளிரணி<<>>, இளைஞரணி என கட்சியை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அக்கட்சியினர் பாஜகவில் இணைந்தது பேசுபொருளாகியுள்ளது.

Similar News

News November 4, 2025

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: EPS

image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 31 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம், EPS வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின்பும் இந்நிலை தொடர்வதாக கூறிய அவர், இலங்கை அரசை தொடர்பு கொண்டு, பிரச்னைக்கு தீர்வுகாண மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய உதவிகளை வழங்க திமுக அரசையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News November 4, 2025

FLASH: தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $54 குறைந்து $3,948-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 22 கேரட் தங்கம் இன்று சவரனுக்கு ₹800 குறைந்த நிலையில், நாளையும் கணிசமாக விலை குறையலாம். SHARE IT

News November 4, 2025

உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க… PHOTOS

image

தற்காலத்தில் சிறுவர்கள் எப்போதும் போனுடனே இருக்கின்றனர். இதனால் அவர்களின் கவனக்குவிப்பு திறனும் நினைவாற்றலும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், உங்கள் குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் உணவுகளை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு தெரிந்த ஐடியாவையும் கமெண்ட் பண்ணுங்க!

error: Content is protected !!