News January 3, 2026

விஜய் கட்சியில் இதற்குதான் இணைந்தேன்: ஜேசிடி பிரபாகர்

image

அதிமுகவில் பிரிந்தவர்களை இணைக்கும் பணி கைகொடுக்காததால் <<18744071>>தவெகவில் இணைந்ததாக<<>> ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். மேலும், எம்ஜிஆரைப் பார்த்தபோது என்ன மகிழ்ச்சி ஏற்பட்டதோ, அதேபோல் விஜய்யை சந்தித்தபோது ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். வீட்டுக்கு வீடு விஜய் முழக்கம் உருவாகிக் கொண்டிருப்பதாகவும், தமிழ்நாட்டிற்கு ஒரு மாற்றம் தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News January 25, 2026

கஞ்சா கடத்தும் மையமான தமிழகம்: TTV தினகரன்

image

TN-ல் நடக்கும் சட்டவிரோத செயல்களில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்புள்ளதாக TTV தினகரன் சாடியுள்ளார். சேலத்தில் சட்டவிரோதமாக மது விற்ற திமுக நிர்வாகி கைது, ராமநாதபுரத்தில் 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்திகளை X-ல் சுட்டிக்காட்டி, TN-ஐ கஞ்சா கடத்தும் மையமாக திமுக அரசு மாற்றிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கடத்தல் பின்னணியை கண்டறிந்து சட்டவிரோத செயல்களை அரசு தடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

News January 25, 2026

தேர்தல் அல்ல; ஜனநாயகப் போர்: விஜய்

image

பூத் என்றாலே கள்ள ஓட்டுப் போடும் இடம் என திமுக, அதிமுகவினர் நினைப்பதாக விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தல், TN மக்களுக்கு வெறும் தேர்தல் மட்டுமல்ல ஜனநாயகப் போர் என ஆவேசமாக கூறினார். மேலும், ஆளும் கட்சி, ஏற்கெனவே ஆண்ட கட்சிக்கு மாற்றாக தவெகவை அரியணையில் அமர்த்த மக்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். உங்கள் கருத்து என்ன?

News January 25, 2026

செங்கோட்டையனுக்கு நெருக்கடி

image

அதிமுக கூட்டணியில் TTV இணைந்த நிலையில், இதைத்தான் EPS-யிடம் அப்போவே செய்யச் சொன்னேன்; ஆனால் என்னை வெளியே அனுப்பி அனுப்பிவிட்டாரே என்று செங்கோட்டையன் புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் தவெகவில் இணைந்து சில மாதங்கள் ஆகியும் பொறுப்பு வழங்காததால், KAS-ஐ நம்பி வந்தவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது, KAS-க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாம்.

error: Content is protected !!