News January 17, 2026

விஜய் கட்சியில் இணைந்த அடுத்த அதிமுக தலைவர்

image

அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட EX MLA புரசை V.S.பாபு தவெகவில் இணைந்துள்ளார். 2008 காலக்கட்டத்தில் திமுக மா.செ.வான புரசை வி.எஸ்.பாபு, அதிமுக மா.செ.வாக இருந்த சேகர்பாபுவை எதிர்த்து அரசியல் செய்தவர். 2011-ல் சேகர்பாபு திமுகவில் இணைந்ததால், வி.எஸ்.பாபு அதிமுகவுக்கு தாவினார். தற்போது மா.செ பதவி பறிக்கப்பட்டதால், செங்கோட்டையனுக்கு ஆதரவாக தவெகவில் ஐக்கியமாகி இருக்கிறார்.

Similar News

News February 8, 2026

ராசி பலன்கள் (08.02.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News February 8, 2026

புத்தகப்பை சுமக்க வேண்டிய வயதில்… மாணவிக்கு அவலம்

image

TN-ல் பள்ளி மாணவிகள் கர்ப்பமாகும் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியளிக்கின்றன. சேலம், தலைவாசல் அருகே 17 வயதான பள்ளி மாணவி வயிற்று வலிக்காக ஹாஸ்பிடலுக்கு சென்றபோது, கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், வலி அதிகமாகி அந்த மாணவிக்கு குழந்தையும் பிறந்துள்ளது. இந்த கொடூரத்திற்கு காரணம், அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர் எனத் தெரியவந்துள்ளது. தற்போது அவர் கம்பி எண்ணுகிறார்.

News February 8, 2026

நடிகர் சுனில் காலமானார்.. பிரியங்கா வேதனை

image

<<19075789>>நடிகர் சுனில் தாபா<<>> மறைவுக்கு பிரியங்கா சோப்ரா உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘எப்போதுமே நீங்கள் தான் எனது கோச். நான் எனது தந்தையை இழந்தபோது நீங்கள் உறுதுணையாக இருந்தீர்கள். என் கடினமான காலத்தில் நிறைய உதவிகளை செய்திருக்கிறீர்கள்’ எனத் தெரிவித்துள்ளார். ‘மேரி கோம்’ படத்தில் பிரியங்கா சோப்ராவின் கோச் கேரக்டரில் சுனில் தாபா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!