News December 31, 2025
விஜய் உடன் மோதும் அஜித்

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனை மிகப்பெரிய வெற்றியடைய செய்ய வேண்டும் என நினைத்த அவரது ரசிகர்களுக்கு, பேரிடியாக ஒரு தகவல் வந்துள்ளது. அஜித்தின் மங்காத்தாவை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம் SM-ல் வீடியோ பகிர்ந்துள்ளது. ஜன.10-ல் மங்காத்தா ரீ-ரிலீசானால் மீண்டும் தல, தளபதி கிளாஷ் உருவாகும். பராசக்தியும் ரிலீஸ் ஆவதால் ஜனநாயகனின் வசூல் பாதிக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
Similar News
News January 29, 2026
தங்கம் வாங்குவோருக்கு எச்சரிக்கை

தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதால், மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. கள்ளச் சந்தையில் ‘வங்கதேச சிவப்புத் தங்கம்’ என்ற பெயரில் போலி தங்கத்தை விற்கத் தொடங்கியுள்ளனர். அதில், காப்பர், நிக்கல், ஜிங்க் உள்ளிட்ட உலோகங்கள் மட்டுமே இருப்பதாகவும், துளிகூட தங்கம் இல்லை எனவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதனால், BIS ஹால்மார்க் முத்திரை இல்லாத நகைகளை வாங்காதீர்கள். உஷாரா இருங்க!
News January 29, 2026
காலை பார்த்தால்தான் சரியாக நடக்க முடியும்: EPS பதிலடி

மோடி வந்தவுடன் சூரியன் மறைந்துவிட்டதாக EPS கூறியதற்கு, ‘மேலே பார்க்காமல் கால்களை மட்டுமே பார்த்தால் சூரியன் எப்படித் தெரியும்’ என அண்மையில் ஸ்டாலின் சாடியிருந்தார். அதற்கு, ‘காலை பார்த்தால் தான் சரியான பாதையில் பயணிக்க முடியும்’ என EPS பதிலடி கொடுத்துள்ளார். திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்து கேள்வி எழுப்பினால், அதற்கு பதிலளிக்காமல் அவதூறு பரப்புவதா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
News January 29, 2026
திமுக கூட்டணிக்கு அடிபோடும் ராமதாஸ்?

தவெகவுடன் கூட்டணி இல்லை எனக் கூறிய ராமதாஸ் தரப்பு, திமுகவுடனான கூட்டணிப் பேச்சை மறுக்கவில்லை. முன்னதாக, கூட்டணி பற்றி திமுக எடுக்கும் முடிவில் விசிக தலையிடாது என திருமா கூறியிருந்தார். இந்நிலையில், திருமாவுடன் தங்களுக்கு எந்தச் சண்டையும் இல்லை என்றும், விரைவில் வெற்றிக்கூட்டணி அமையும் எனவும் அருள் MLA பேசியுள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெறவே அவர் இவ்வாறு பேசுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


