News August 22, 2025

விஜய் உடன் கூட்டணி சேரும் முக்கிய கட்சி?

image

விஜய் இதுவரை விமர்சிக்காத அதிமுகவை கூட மதுரை மாநாட்டில் விமர்சித்தார். ஆனால், <<17474959>>விஜயகாந்தை பாராட்டி<<>> பேசியதில் அரசியல் கணக்கு இருப்பதாக பார்க்கப்படுகிறது. ‘விஜய் எங்க வீட்டு பையன், எங்களுக்கு தம்பிதான்’ என பிரேமலதாவும் தெரிவித்துள்ளார். இதனால், தவெக – தேமுதிக கூட்டணி உருவாகும் என பேச்சு அடிபடுகிறது. ஜன. 9 தேமுதிக மாநாட்டில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகலாம். இந்த கூட்டணி பற்றி உங்க கருத்தென்ன?

Similar News

News August 22, 2025

விஜய்க்கு தேர்தலில் தக்க பதிலடி: அமைச்சர் KN நேரு

image

40 ஆண்டுகளாக அரசியலில் உள்ள தலைவரை அங்கிள் என்ற விஜய்யின் தராதரம் அவ்வளவுதான் என அமைச்சர் KN நேரு கருத்து தெரிவித்துள்ளார். திருச்சியில், செய்தியாளர்களை சந்தித்த அவர், 50 பேர் கூடிவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைப்பவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார். CM ஸ்டாலின் குறித்த விஜய்யின் கருத்துக்கு திமுக, சிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

News August 22, 2025

அனிருத்துக்கு அதிர்ச்சி.. ஐகோர்ட்டில் வழக்கு

image

சென்னை கூவத்தூரில் நாளை நடைபெற உள்ள அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு, தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசிக செய்யூர் MLA பனையூர் பாபு சென்னை ஐகோர்ட்டில் அளித்துள்ள மனுவில், கலெக்டரிடம் உரிய அனுமதி பெறாமல் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை இன்று மதியம் சென்னை ஐகோர்ட் நடைபெறவுள்ளது.

News August 22, 2025

பொது அறிவு வினா- விடை

image

கேள்விகள்:
1. சென்னை என்ற பெயர் யாரின் பெயரில் இருந்து வந்தது?
2. கதக் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
3. மனித உடலில் வியர்க்காத உறுப்பு?
4. வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் வாயுவின் சதவீதம் என்ன?
5. முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்ற இடம் எது?
சரியான பதில்களை கமெண்ட் பண்ணுங்க. பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.

error: Content is protected !!