News April 1, 2026

விஜய் உடன் கூட்டணி.. அமைச்சர் ராம்தாஸ் பரபரப்பு

image

5 மாநில தேர்தலிலும் NDA கூட்டணியே வெற்றிபெறும் என இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். TN-ல் தேர்தலுக்கு பிறகு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால் விஜய்யின் ஆதரவை கோரி NDA ஆட்சி அமைக்கும் என்றார். ஆனால், பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் திட்டவட்டமாக கூறியதால், NDA-வுக்கு அவர் ஆதரவளிக்க வாய்ப்பில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.<<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 8, 2026

மூன்று மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்: EPS

image

திமுக ஆட்சியில் ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டால் திமுகவினர் அடித்து உதைத்து, வியாபாரிகளை மிரட்டுவதாக EPS விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் எது கிடைக்கிறதோ இல்லையோ, கஞ்சா கிடைக்கிறது என்ற அவர், திமுக நிர்வாகிகள் துணை நிற்பதால் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை என சாடினார். மேலும், அதிமுக ஆட்சி அமைந்த 3 மாதத்தில் கஞ்சா முழுமையாக ஒழிக்கப்படும் என உறுதியளித்தார்.

News April 8, 2026

வெள்ளி நகை விலை இன்று ₹10,000 மாறியது

image

<<19594877>>தங்கத்தை<<>> போல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹10 உயர்ந்து ₹265-க்கும், கிலோவுக்கு ₹10,000 அதிகரித்து ₹2.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 7% வரை உயர்ந்து 1 அவுன்ஸ்(28g) 78 டாலர்களுக்கு விற்பனையாகிறது. வரும் நாள்களிலும் தங்கம், வெள்ளி விலை உயரும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

News April 8, 2026

2027 வரை வறட்சிதான்.. மக்களுக்கு எச்சரிக்கை

image

2027 வரை உலகம் முழுவதும் வெயில் சுட்டெரிக்கப் போவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஏனென்றால், பசிபிக் பெருங்கடலில் அதிகரித்துவரும் வெப்பத்தால் ‘சூப்பர் எல் நினோ’ உருவாகவுள்ளதாக கூறுகின்றனர். இதனால், இந்தியாவில் வழக்கமான மழைப்பொழிவு மிகவும் குறைந்து விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கின்றனர். தென் அமெரிக்காவில் வெள்ளப்பெருக்கும், ஆசியாவில் வறட்சியும் ஏற்படுமாம்.

error: Content is protected !!