News December 11, 2025
விஜய் உடன் கூட்டணியா? முடிவை அறிவித்தார்

பாஜகவுடன் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸை விஜய் விமர்சித்து பேசாத நிலையில், தவெகவுடன் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், 2026 தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்று புதுச்சேரி <<18524978>>CM<<>> ரங்கசாமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘நன்றி வணக்கம்’ என கூறிச் சென்றார். இது தவெக உடனான கூட்டணிக்கான சமிக்ஞையே என கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
Similar News
News December 19, 2025
பொங்கல் பரிசு.. ₹3,000, + ₹10,000 ஜாக்பாட்

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் TN அரசு ₹3,000 – ₹5,000 வழங்க திட்டமிட்டிருப்பதாக ஏற்கெனவே தகவல் கசிந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க பிஹார் பாணியில் மகளிர் சுய தொழிலுக்காக பெண்களுக்கு ₹10,000 என்ற அறிவிப்பை வெளியிட NDA திட்டமிட்டுள்ளதாம். ஜனவரி முதல் வாரத்தில் PM மோடி (அ) அமித்ஷா இருவரில் யாரேனும் ஒருவர் TN-ல் பொங்கல் விழாவை கொண்டாட உள்ள நிலையில், அதில் இந்த அறிவிப்பை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
News December 19, 2025
நீங்க பாத்ரூமில் எவ்வளோ நேரம் உட்கார்ந்திருக்கீங்க?

தவறான உணவுப் பழக்கம், நார்ச்சத்து குறைபாடு போன்றவை மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள். ஆனால், நீண்டநேரம் போனை பார்த்தபடி பாத்ரூமில் அமர்ந்திருந்தாலும், இப்பிரச்னை வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நேரம் டாய்லெட்டில் அமர்ந்திருப்பதால், ரத்தக் குழாய்களில் அழுத்தம் அதிகரிக்கும். மேலும், இயற்கையாக மலம் கழிக்க உடல் தரும் சிக்னலை கவனிக்காமல் அடக்கி வைப்பதாலும் இச்சிக்கல் வருமாம்.
News December 19, 2025
மகளிர் உரிமைத் தொகை உயர்வு… வந்தாச்சு குட் நியூஸ்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட மகளிருக்கு மேல்முறையீடு செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், திட்டத்தின் பயனர்களை அதிகரிக்க CM ஸ்டாலின் தொடர் நடவடிக்கை எடுத்து வருவதாக செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ₹1,000 வழங்கப்பட்டு வருவதை மேலும் சில நூறுகள் அதிகரிக்க அரசு திட்டமிட்டு வருவதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


