News December 16, 2025
விஜய் உடன் இணையும் அடுத்த அதிமுக தலைவர் இவரா?

JCD பிரபாகரனை தவெகவில் இணைக்க செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், விஜய் தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறியிருந்தார். தவெகவில் இணைகிறீர்களா என்ற கேள்விக்கும் அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை. அதிமுகவின் முக்கிய முகமான EX MLA JCD பிரபாகர் தற்போது OPS அணியில் உள்ளார்.
Similar News
News December 20, 2025
பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்

நடிகர், எழுத்தாளர், இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்ட ஸ்ரீனிவாசன்(69) கொச்சியில் காலமானார். மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான இவர் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவின் கவுண்டமணி என ரசிகர்கள் இவரை அழைப்பதுண்டு. தமிழில் ‘லேசா லேசா’, ‘ரெட்ட சுழி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தேசிய விருது, 5 கேரள மாநில சினிமா விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். #RIP
News December 20, 2025
தமிழில் பேசி PM மோடியை சிரிக்க வைத்த பிரியங்கா

ஓம் பிர்லா கொடுத்த டீ பார்ட்டியில் தமிழில் பேசிய பிரியங்கா, PM மோடி உள்ளிட்டோரை கலகலவென சிரிக்க வைத்துள்ளார். பிரதமருக்கு MP மாணிக்கம் தாகூர் தமிழில் ‘வணக்கம்’ கூறினார். அப்போது, பிரியங்கா காந்தி, எனக்கும் தமிழில் சில வார்த்தைகள் தெரியும் என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ராஜ்நாத்சிங், ‘எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்ற உடன் ‘காங்கிரஸுக்கு ஓட்டு போடுங்க’ என்ற உடன் சிரிப்பலை எழுந்தது.
News December 20, 2025
ISIS மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா

சிரியாவில் ISIS தாக்குதலில் 3 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதற்கு <<18557457>>பதிலடி<<>> கொடுக்கப்படும் என டிரம்ப் வார்னிங் கொடுத்திருந்தார். இந்நிலையில், எச்சரித்தபடி ISIS தளங்கள் மீது கடுமையான வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கு Operation Hawkeye Strike என்று பெயரிட்டுள்ளதாக கூறியுள்ள அமெரிக்கா, எதிரிகளை வேட்டையாடும் இந்த நடவடிக்கை தொடரும் என்று குறிப்பிட்டுள்ளது.


