News March 7, 2026

விஜய் இப்படிப்பட்டவரா.. சங்கீதாவால் பரபரப்பு

image

சங்கீதா விவாகரத்து கோரிய பரபரப்பே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் அவர் <<19319427>>புதிய மனுவை<<>> தாக்கல் செய்திருப்பதுதான் இன்றைய ஹாட் டாபிக். அதில், மேலும் பல பரபரப்பு குற்றச்சாட்டுகளை சங்கீதா முன்வைத்துள்ளார். விஜய்யின் அரசியல் சூழல் கருதி பலமுறை சுமுகமாக விவாகரத்து பெற முயற்சி செய்ததாக குறிப்பிட்டுள்ள அவர், விஜய் பிரிந்து செல்ல மறுத்து வழக்கறிஞர் மூலம் மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 30, 2026

திண்டுக்கல்: அதிமுக-வினர் மீது பாய்ந்த வழக்கு!

image

வேடசந்தூர் தொகுதியில் அதிமுக. முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை வரவேற்று கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து ஊர்வலமாக சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து பறக்கும் படையினர் புகாரின் பேரில், பரமசிவம் உள்ளிட்டோர் மீது வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் குஜிலியம்பாறையிலும் நெரிசல் ஏற்படுத்தியதாக மேலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

News March 30, 2026

தங்கம் விலை குறைந்தது

image

மேற்காசியாவில் போர் சூழல் சற்று தணிந்திருந்தாலும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1 அவுன்ஸ் (28g) தங்கம் $46 (இந்திய மதிப்பில் ₹4,359) குறைந்து $4445.48-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1.50 குறைந்து $68.07-க்கு விற்பனையாகிறது. இதனால், இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.

News March 30, 2026

தமிழகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

image

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி ஏப்.6-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், அறிவிக்கப்பட்டுள்ள 8 நாள்களில் 4 நாள்கள் விடுமுறை என்பதால் அன்றெல்லாம் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது. இந்நிலையில், கொளத்தூரில் CM ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். 234 நாதக வேட்பாளர்களும் இன்றே வேட்புமனு தாக்கல் செய்ய சீமான் உத்தரவிட்டுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!