News December 11, 2025
விஜய் இன்று முக்கிய ஆலோசனை

பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். பூத் கமிட்டி, நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பணிகள் முழுமை அடையாததால், பல மா.செ.,க்கள் மீது விஜய் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், தேர்தலுக்கு முன்னதாக மா.செ.,க்களை ஒழுங்குப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
Similar News
News April 9, 2026
VVPAT-ல் புகை வாக்குப்பதிவு நிறுத்தம்!

காரைக்காலில் கோத்துகுளம் அரசுப்பள்ளி வாக்குச்சாவடியில் 15 நிமிடங்களுக்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. VVPAT இயந்திரத்தில் புகை வந்ததையடுத்து, அதனை வாக்குச்சாவடிக்கு வெளியே அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இயந்திரத்தின் பேட்டரி அதீதமாக சூடானதால் புகை வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது, பேட்டரி மாற்றப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
News April 9, 2026
இன்னும் போராடணுமா.. இன்னலில் தமிழக மக்கள்

நாடு சுதந்திரமடைந்து 79 ஆண்டுகளாகிவிட்டது. தமிழகத்தில் 17-வது பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. 12 முதல்வர்கள் இதுவரை மாநிலத்தில் ஆட்சி செய்துள்ளனர். 234 MLA-க்கள், 39 MP-க்கள் உள்பட ஆயிரக்கணக்கான உள்ளாட்சி நிர்வாகிகளும் உள்ளனர். இவ்வளவு இருந்தும், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக இன்றும் மக்கள் போராட வேண்டிய நிலை உள்ளது. உங்கள் கருத்து என்ன?
News April 9, 2026
FLASH: ஒரே நாளில் ₹5,000 குறைந்தது

<<19604491>>தங்கத்தை தொடர்ந்து<<>> வெள்ளி நகைகள் விலை இன்று கிலோவுக்கு ₹5,000 குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் 1 கிராம் ₹5 குறைந்து ₹260-க்கும், மொத்த விற்பனையில் பார் வெள்ளி 1 கிலோ ₹2,60,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ்(28g) 2% விலை குறைந்து 73 டாலர்களுக்கு விற்பனையாவதால் நம்மூர் சந்தையில் மீண்டும் வெள்ளி விலை இறங்குமுகத்தில் உள்ளது கவனிக்கத்தக்கது.


