News December 16, 2025

விஜய் அரசியல் வருகைக்கு இதுவும் காரணம்: SAC

image

சினிமாவில் நடித்து எவ்வளவோ சம்பாதிப்பதை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்துள்ளதாக, அவரது தந்தை SA சந்திரசேகர் கூறியுள்ளார். தமிழகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் விஜய் மனதில் உருவானதற்கு அவர் நடித்த சில படங்களும் கூட காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திரையுலகம், சமூகம், அரசியல் என எதுவாக இருந்தாலும் மாற்றங்களை யாராலும் மாற்ற முடியாது என்றும் SAC கூறினார்.

Similar News

News December 18, 2025

கிரிக்கெட்டில் இவங்கள அடிச்சிக்க ஆளேயில்லை

image

கிரிக்கெட்டில் ஆல் டைம் பெஸ்ட் ODI பேட்ஸ்மென் தரவரிசை பட்டியலை espn cricinfo வெளியிட்டுள்ளது. இதில், சச்சின் வழக்கம்போல் முதலிடத்தில் இருக்கிறார். கோலி, ரோஹித் ஆகியோர் எந்த இடங்களில் இருக்கின்றனர் என்று தெரியுமா? அதேபோல், வேறு எந்த பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர் என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 18, 2025

Welcome to my world… வரவேற்ற அஜித்

image

அஜித்தின் ரேஸிங் பற்றி ஆவணப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதனை உறுதிப்படுத்தியுள்ள விஜய், இப்படம் ஆவணப்படமா (அ) படமா என்பது பற்றி அஜித் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார். அஜித் சார் அழைத்ததும் உடனடியாக அங்கு சென்றதாக தெரிவித்த விஜய், ‘Welcome to my world’ என தன்னை அன்போடு அஜித் அழைத்ததாகவும் கூறி நெகிழ்ந்துள்ளார்.

News December 18, 2025

காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார் விஜய்

image

ஈரோடு மக்கள் சந்திப்பை பிரமாண்டமாகவும், பாதுகாப்புடனும் ஏற்பாடு செய்த செங்கோட்டையனுக்கும், போலீஸுக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். மக்களை சந்திக்க புறப்பட்டதில் இருந்தே பல தடைகள் தொடர்ந்து வருகின்றன. அதையெல்லாம் மக்களின் பேராதரவுடன் முறியடித்து வருகிறோம். அந்த வகையில், ஈரோட்டில் நடந்த சந்திப்பு, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!