News November 10, 2025
விஜய் + அதிமுக + பாஜக கூட்டணி… முடிவை அறிவித்தார்

அதிமுக, பாஜக கூட்டணியில் விஜய்யை சேர்க்க EPS திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், திமுக – தவெக இடையே தான் போட்டி என விஜய் பேசியது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார். அதில், கட்சியினரை உற்சாகப்படுத்த எல்லா தலைவர்களும் இப்படித்தான் பேசுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால், அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சு நடப்பதை அவர் மறைமுகமாக உறுதி செய்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
Similar News
News November 10, 2025
பிரபல நடிகை வீட்டில் பதற்றம்… போலீஸ் குவிந்தது

<<18247000>>நடிகை த்ரிஷா<<>> வீட்டை தொடர்ந்து பழம்பெரும் நடிகை சச்சு வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக இ-மெயில் மூலம் போலீஸுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, சச்சு வீட்டில் குவிந்த போலீஸார், மோப்ப நாய், நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.
News November 10, 2025
காயமடைந்தவர்களை நேரில் சந்திக்க உள்ள அமித் ஷா

டெல்லி கார் வெடிப்பு குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் செங்கோட்டை அருகே வெடித்தது ஹூண்டாய் I20 என்றும், சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
விண்வெளி PHOTOS வெளியிட்ட நாசா

நாசா மிகத் தெளிவான கோள்களின் படங்களை வெளியிட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தால் பிடிக்கப்பட்ட புகைப்படங்கள், இதுவரை இல்லாத வகையில் தெளிவாக உள்ளன. நம் சூரியக் குடும்பத்தில் பல கோள்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. கோள்களின் புதிய, தெளிவான புகைப்படங்களை காண, மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்யவும். SHARE பண்ணுங்க.


