News December 24, 2025

விஜய்யை விமர்சிக்காதீர்கள்: பியூஷ் கோயல்

image

விஜய்க்கு எதிராக யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என மத்திய அமைச்சர் <<18649356>>பியூஷ் கோயல்<<>> கூறியுள்ளார். தொகுதி பங்கீடு தொடர்பாக நேற்று TN வந்த அவர், விஜய்யை ஸ்பாய்லர் என குறிப்பிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் திமுகவுக்கான சிறுபான்மை வாக்குகளை சரிசமமாக பிரிப்பதில் விஜய் முக்கிய பங்கு வகிப்பார். எனவே அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம் என கட்சியினரிடம் கூறியதாக தகவல் வந்துள்ளது.

Similar News

News December 24, 2025

சருமம் பளபளக்க இதை குடிங்க!

image

சருமப் பராமரிப்பு என்பது தொடர்ச்சியான செயல்முறை, ஒரே இரவில் மாற்றம் ஏற்படாது. எனவே, தொடர்ச்சியாக சில காய்கறி மற்றும் பழங்களின் சாறுகளை அருந்தி வந்தால், சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும். முகத்தில் உள்ள கருவளையங்கள் முதல் தோல் சுருக்கம் வரை அனைத்திருக்கும் தீர்வு அளிக்கும் ஜூஸ்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.

News December 24, 2025

தமிழ்நாடு அரசு VOLVO பஸ்களின் கட்டணம் இதுதான்!

image

CM ஸ்டாலின் தொடங்கி வைத்த நவீன <<18656900>>VOLVO <<>>குளிர்சாதன சொகுசுப் பஸ்களின் கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளன. சென்னை – மதுரை வழித்தடத்திற்கு ₹790, சென்னை – நெல்லைக்கு ₹1080, சென்னை – சேலத்திற்கு ₹575, கோவை – சென்னைக்கு ₹880, சென்னை – திருப்பூருக்கு 800, திருச்சி – சென்னைக்கு ₹565 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் பயணிக்க கிலோ மீட்டருக்கு ₹1.70 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News December 24, 2025

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் தற்கொலை.. மனைவி கண்ணீர்

image

ஹாலிவுட் நடிகர் <<18637371>>ஜேம்ஸ் ரன்சோன்<<>>(46) தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது மனைவி ஜேமி உருக்கமாக SM-ல் பதிவிட்டுள்ளார். ‘உன்னை காதலிப்பதாக முன்பு 1,000 முறை சொல்லியிருப்பேன். மீண்டும் உன்னை காதலிப்பேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ‘IT: சாப்டர் 2’ படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான ஜேம்ஸ், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!