News February 15, 2026
விஜய்யை ஆட்டுவிக்கிறதா ஆந்திரா?

ஆந்திர Ex CM ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண நிகழ்வில் விஜய் பங்கேற்றார். அப்போது, தேவையில்லாமல் பாஜகவை சீண்ட வேண்டாம், மாநில தேர்தல் என்பதால் திமுகவை மட்டும் எதிர்த்து அரசியல் செய்யுங்கள் என ஜெகன் கூறினாராம். இதனால்தான், சேலத்தில் பேசிய விஜய், சட்டப்பேரவை தேர்தல் என்பதால் மக்களால் டெலிட் செய்யப்பட்டவர்கள் பற்றி ஏன் பேச வேண்டும் என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. ஒருவேளை இருக்குமோ?
Similar News
News February 16, 2026
பிரபல பாடகி கீதா காலமானார்

பிரபல பின்னணி பாடகி கீதா பட்நாயக்(73) உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒடிசாவை சேர்ந்த கீதா, 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்(ஹிந்தி), ஒடியா மொழி படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

NDA கூட்டணியில் பஞ்சரான டயர்கள்: உதயநிதி

இளைஞர்களும், பெண்களும் திமுக பக்கம் தான் என உதயநிதி கூறியுள்ளார். வரும் தேர்தலில் மத்திய அரசிற்கும் தமிழக அரசிற்கும் போர் என்ற அவர், பாசிஸ்ட்களையும், பழைய, புதிய அடிமைகளையும் வீழ்த்த வேண்டிய பொறுப்பு இளைஞர்கள் ஒவ்வொருவரிடமும் உள்ளது என்றார். மேலும், தமிழ்நாட்டின் உரிமைக் குரலை, எந்நாளும் ஓங்கி ஒலிப்போம் எனக் கூறினார். மேலும், NDA கூட்டணியில் உள்ள கட்சிகள் பஞ்சரான டயர்கள் எனவும் சாடியுள்ளார்.