News December 15, 2025
விஜய்யை ஆட்சியில் அமர வைப்பதே லட்சியம்: KAS

ஆண்டுக்கு ₹500 கோடி வரும் திரைத்துறையை விட்டுவிட்டு, விஜய் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் தவெக ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், தனது உடலில் இருக்கும் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் சிந்தியாவது விஜய்யை கோட்டையில் அமர வைப்பேன் என்று சூளுரைத்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் மக்கள் சக்தியாக விஜய் உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Similar News
News December 16, 2025
டிராகன் பழத்தின் நன்மைகள்

டிராகன் பழம் விநோதமாக தெரிந்தாலும், இதில் பல நன்மைகள் உள்ளன. பழத்தில் உள்ள வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. டிராகன் பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 16, 2025
நிதிஷ்குமார் செயலால் ஆத்திரமடைந்த நடிகை

பெண் டாக்டரின் ஹிஜாப்பை பிடித்து இழுத்ததற்கு பிஹார் CM <<18575369>>நிதிஷ்குமார்<<>> மன்னிப்பு கேட்க வேண்டும் என ‘தங்கல்’ பட நடிகை சாய்ரா வசீம் வலியுறுத்தியுள்ளார். ஒரு பெண்ணின் கண்ணியம் விளையாட்டு பொருள் அல்ல எனவும், பொதுமேடையில் அநாகரிகமாக நடந்தது மட்டுமல்லாமல், சிரித்தது கோபத்தை வரவழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அரசியல் அதிகாரம் இருந்தால் எந்த எல்லையையும் கடக்கலாமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News December 16, 2025
மாணவன் பலி.. CM ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்

திருவள்ளூரில் அரசுப் பள்ளி பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து, 7-ம் வகுப்பு <<18583805>>மாணவன் உயிரிழந்த<<>> துயரகரமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ₹3 லட்சம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.


