News November 22, 2025
விஜய்யுடன் கூட்டணி இல்லை.. அதிகாரப்பூர்வ முடிவு

தவெக – காங்., கூட்டணி உருவாகுமா என அண்மைக்காலமாக அரசியல் களத்தில் பேசப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இண்டியா கூட்டணி வலுவாக இருப்பதாக செல்வப் பெருந்தகை கூறியிருந்தார். இந்நிலையில், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த <<18349738>>5 பேர் கொண்ட குழுவை<<>> காங்., அமைத்துள்ளது. இதன்மூலம், தவெக – காங்கிரஸ் கூட்டணி இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
Similar News
News February 15, 2026
வங்கதேச தேர்தலில் ஒரு இடத்தில் வென்ற BJP

வங்கதேச தேர்தலில் BJP-க்கு என்ன வேலை என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் ஒரு சீட்டை வென்றது இந்தியாவைச் சேர்ந்த BJP அல்ல, Bangladesh Jatiya Party. அந்த கட்சியை சேர்ந்த ஆண்டலிவ் ரஹ்மான் என்பவர் போலா-1 தொகுதியில் 30,206 வாக்குகள் வெற்றி பெற்றுள்ளார். வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி 209 சீட்களை பெற்று ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
News February 15, 2026
கல்கி கிருஷ்ணமூர்த்தி பொன்மொழிகள்

*நினைத்த காரியத்தை முடித்தே தீரவேண்டும் என்ற வைராக்கியம் கொண்டவர்களுக்கு, உலகமே வழிவிடும். * வெறுப்பினால் எதையும் சாதிக்க முடியாது. அன்பினால் எதையும் வெல்ல முடியும். *காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். இன்று உயர்ந்தவர்கள் நாளை வீழ்வார்கள், இன்று வீழ்ந்தவர்கள் நாளை உயர்வார்கள். *நேரடியாகத் தாக்கும் பகையை விட, புன்னகைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வஞ்சகம் மிகவும் ஆபத்தானது.
News February 15, 2026
SPORTS 360°: பேட்மிண்டனில் இந்தியாவுக்கு தங்கம்

*ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், மோகன் பகான் 2-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தியது *FIH ஹாக்கி லீக்கில் இந்தியா 2-4 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோற்றது *பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இரட்டையர் பிரிவில் பிரமோத் பகத் – சுகந்த் இணை தங்கம் வென்றது * உள்ளரங்க நீளம் தாண்டுதலில் 8.01 மீ தாண்டி புதிய தேசிய சாதனையை லோகேஷ் சத்யநாதன் படைத்துள்ளார்.


