News November 6, 2025

விஜய்யின் பேச்சு விந்தையிலும் விந்தை: நயினார்

image

புதிதாகக் கட்சி ஆரம்பித்துவிட்டு எங்களுக்கு தான் போட்டி என்றால், அது விந்தையிலும் விந்தையாக இருப்பதாக விஜய்யின் பேச்சு குறித்து நயினார் கருத்து தெரிவித்துள்ளார். பாஜக, தேசிய அளவில் அதிக MP-க்களை கொண்ட பெரிய கட்சி எனவும், தங்கள் கூட்டணி வலுவாக நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். முன்னதாக, அதிமுக, பாஜக தலைவர்கள் விஜய், NDA கூட்டணியில் சேர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தது கவனிக்கத்தக்கது.

Similar News

News February 4, 2026

தென் மண்டலத்தில் கனிமொழி நடத்தும் ஸ்பெஷல் சர்வே

image

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியை உள்ளடக்கிய தென்மண்டலத்தின் திமுக தேர்தல் பொறுப்பாளராக கனிமொழி உள்ளார். இந்த மாவட்டங்களில் யாரை நிறுத்தினால் சிரமப்படாமல் ஜெயிக்க முடியும் என்பது குறித்து தனிப்பட்ட முறையில் சர்வே டீமை களத்தில் இறக்கி இருக்கிறாராம் கனிமொழி. தென்மாவட்டங்களிலுள்ள 22 தொகுதிகளிலும் பல கோணங்களில் சர்வே நடப்பதால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனராம்.

News February 4, 2026

ஒரே நாளில் ₹1 லட்சம் கோடி லாபம்

image

இந்திய பொருள்கள் மீதான வரியை டிரம்ப் குறைத்த நிலையில், அதானி குழும பங்குகளின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. வர்த்தகத்தில் அதானி குழும பங்குகளான அதானி கிரீன் எனர்ஜி 12.87%, அதானி எண்டர்பிரைசஸ் 11.89%, அதானி எனர்ஜி 10% வரை உயர்ந்தன. இதனால், நேற்று ஒரே நாளில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ₹1 லட்சம் கோடி வரை உயர்ந்து ₹13.78 லட்சம் கோடியாக அதிகரித்தது.

News February 4, 2026

‘டார்கெட் 50’ விஜய்யின் புதிய இலக்கு

image

TVK எடுத்த சர்வேயில் அக்கட்சிக்கு சென்னை முதல் வடமாவட்டங்கள் வரை மட்டுமே பலம் இருப்பதாக தெரியவந்துள்ளதாம். ஆகையால் அங்குள்ள 50 தொகுதிகளை தேர்வு செய்து, குறைந்தது 30-ல் வெற்றிபெற விஜய் திட்டமிட்டுள்ளாராம். ஏனெனில், தொங்கு சட்டமன்றம் உருவானால் ஆட்சியை தீர்மானிக்கும் <<19011718>>கிங்மேக்கர்<<>> இடத்தை பிடிக்கலாம் என நம்புகிறாராம். ஆனால், பேட்டி ஒன்றில் கிங் ஆக விரும்புவதாக விஜய் கூறியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!