News April 6, 2026
விஜய்யின் பிரசாரம் ரத்து

சென்னையில் விஜய் நாளை மேற்கொள்ளவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. தவெக தரப்பில் கேட்கப்பட்ட நேரத்தில் போலீஸ் அனுமதி மறுத்ததால் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக TN தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. ஏற்கெனவே விஜய்யின் பிரசாரத்துக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என தவெக சார்பில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 9, 2026
எகிறிய வாக்குப்பதிவு.. புதுச்சேரிதான் டாப்!

புதுச்சேரி, கேரளா, அசாமில் வழக்கத்தைவிட அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. இரவு 7 மணி நிலவரப்படி, புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவிற்கு 89.08% வாக்காளர்கள் ஆர்வமாக ஜனநாயக கடமை ஆற்றியுள்ளனர். அதேபோல், கேரளாவில் 77.8%, அசாமில் 85.3% வாக்குகள் பதிவாகியுள்ளன. மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
News April 9, 2026
ஒரே பாட்டில் அரசியலில் முன்னேற முடியாது: அன்புமணி

அரசியல் என்றால் என்ன என்று விஜய்க்கு அன்புமணி விளக்கம் கொடுத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் விஜய் குறித்து இளைஞர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அரசியல் என்பது ஒரே பாடலில் பணக்காரராவது கிடையாது என்றும், அரசியலில் படிப்படியாகத்தான் முன்னேற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அரசியல் என்றால் தரையில் நிற்கனும், மக்களை சந்திக்கனும் எனவும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
News April 9, 2026
கார்களின் விலை மளமளவென குறைந்தது

Maruti Suzuki நிறுவனம் தனது கார்களுக்கு ஏப்ரல் மாத சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹30,000 முதல் அதிகபட்சமாக ₹45,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப்பக்கம் ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.


