News January 4, 2026
விஜய்யின் கொள்கை வரவேற்கத்தக்கது: சீமான்

ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்பது விஜய்யின் பெருந்தன்மையை காட்டுகிறது என சீமான் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் பேசிய அவர், ஆட்சியில் பங்கு என்பதை விஜய் கொள்கையாக வைத்துள்ளார். தமிழகத்திலும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. மத்திய காங்., பாஜக ஆட்சிகளில் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. அது தவறில்லை. வரவேற்கத்தக்கது தான் என பேசியுள்ளார்.
Similar News
News February 8, 2026
4 ராசியினருக்கு எச்சரிக்கை

சனி பகவான் அடுத்த மாதம் 13-ம் தேதி மீன ராசியில் அஸ்தமனமாக உள்ளதால், 4 ராசியினருக்கு சிக்கல் ஏற்படுமாம். *மேஷம்: நிதி இழப்புகளை சந்திக்க நேரிடும். பொறுமையாக செயல்படுங்கள். *துலாம்: கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். வாக்குவாதத்தை தவிர்க்கவும். *விருச்சிகம்: வீட்டில் சண்டை சச்சரவு அதிகம் ஏற்படும். பெரிய இழப்புகளை சந்திப்பீர்கள். *மகரம்: செலவுகள் அதிகரிக்கும். முதலீடுகளில் கவனமாக இருங்கள்.
News February 8, 2026
விஜய்யுடன் சிரித்து பேசிய ஜெகன் மோகன் ரெட்டி

சென்னையில் நடைபெற்ற ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் வீட்டு திருமணத்தில் விஜய் கலந்துகொண்டார். கோட் சூட்டில் ஸ்டைலாக கலந்துகொண்ட விஜய், ஜெகன் மோகன் ரெட்டி அருகில் அமர்ந்து சிறிது நேரம் சிரித்து பேசினார். பின்னர் இருவரும் சேர்ந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து போட்டோ எடுத்துக்கொண்டனர். இந்த போட்டோஸ் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
News February 8, 2026
4 சிம்கள், 75GB டேட்டா.. ₹449 மட்டுமே

ஜியோ ஃபேமிலிக்கான புதிய போஸ்ட்பெய்ட் பிளானை ₹449-ல் அறிமுகம் செய்துள்ளது. இந்த பிளானில் குறைவான மாத கட்டணத்தில் ₹449-க்கு மெயின் சிம்முடன் சேர்த்து மொத்தம் 4 சிம் கார்டுகளை பயன்படுத்தலாம். அனைத்து சிம்களுக்கும் அன்லிமிடெட் அழைப்புகளும், மொத்தமாக 75GB டேட்டாவும் வழங்கப்படும். இதன்மூலம் தனித்தனியாக ரீசார்ஜ் செய்வதைவிட, குடும்பத்திற்கே ஒரே பில்லில் குறைந்த செலவில் நிர்வகிக்கலாம்.


